About Us

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரின் மையத்தில் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக நாம் LONDON MISSIONARY SOCIETY ( LMS) வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

LMS லண்டன் மிஷனரி சொசைட்டி 1795 ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் துவக்கப்பட்டதாகும்.  இந்த சொசைட்டி லண்டன் மாநகரில் வசித்து வந்த பல்வேறு கிறிஸ்துவ மக்களால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இங்கிருந்து நூற்றுக்கணக்கான மிஷனரிமார்கள் உலகின் பல இடங்களிலும் அனுப்பப்பட்டார்கள்.. குறிப்பாக இந்திய நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கும் பொருட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்… இந்த லண்டன் மிஷனரி சொசைட்டியின் சார்பாக அது துவக்கப்பட்ட 1795 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை 1800 மிஷனரிமார்கள் உலகம் எங்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.. குறிப்பாக இவர்கள் யாவரும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மிஷினைமார்களாகும். இந்த மிஷனரிமார்கள் இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா,
ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடலில் இருந்த பல்வேறு தீவுகள் உள்ளிட்ட உலகின் பல பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். லண்டன் மிஷினரி இந்தியாவில் சொசைட்டியின் ஊழியம் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தென் கேரளா, இன்றைய சேலம் நாமக்கல் தர்மபுரி,
கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் (வாணியம்பாடி வரை) வரை பரவிக் கிடந்தது.

Rev. ஜான் மில்டன் லெக்லர் (1804-1861) என்பவர் ஜெர்மனிய தேசத்திலிருந்து லண்டன் மிஷனரியின் சார்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குறிப்பாக நாகர்கோயிலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட லண்டன் மிஷனரி சொசைட்டியில் அவர் நான்கு ஆண்டுகள் இறை பணியாற்றி வந்தார். பிறகு இவர் கிறிஸ்துவை 100% அறியாத மக்கள் கொண்ட சேலம் நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு இருந்து கொண்டு அப்போதைய சேலம் மாவட்டத்தின் பகுதிகளாக இருந்த தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் , திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தனது சமூக சேவையையும் சமயப் பணியையும் அவர் மேற்கொண்டார். சுமார் 21 ஆண்டுகள் அவர் இப்பகுதிகளில் சமூக சமயப் பணியாற்றி தமிழ் மொழியையும் கற்று அறிந்து பல்வேறு ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்ததாக நமக்கு தகவல்கள் கூறுகின்றன.

1840 ஆம் ஆண்டு அவர் சேலம் பங்களா தெருவில் இந்தியாவின் முதல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை துவக்கி மாணவர்களுக்கு தொழில் கல்வி அளித்தார். இந்திய வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்று போற்றப்படுகிறது.

1841 ஆம் ஆண்டு Rev. லெக்லர் மற்றும் அவருடன் சேலம் மாவட்ட உதவி கலெக்டர் திரு.எச். ஏ. பிரட், ஏற்காடு மலைக்கு குதிரைகளின் மூலமாக மேலே ஏறி, ஏற்காடு மலையில் சுடு செங்கற்களால் MelRose என்று பெயரிடப்பட்ட குடியிருப்பைக் கட்டினார் என்று வரலாறு கூறுகின்றது. ஏற்காடு மலையில் Holy Trinity ஆலயத்தை Rev. லெக்லர் கட்டினார் என்றும், சேலம் செவ்வாய்பேட்டை அருகில் கோட்டை பகுதியில் 1853 .ல் இவரால் ஒரு ஆலயம் கட்டப்பட்டதாகவும் (இன்றைய சி எஸ் ஐ லெக்லர் நினைவாலயம்) பல்வேறு பதிவுகள் கூறுகின்றன.

Rev. லெக்லர் அவர்கள் 1853 க்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து திருப்பத்தூருக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்து ஊழியங்களை மேற்கொண்டு இருக்கலாம் என்று கருத இயலுகிறது. திருப்பத்தூர் சி எஸ் ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தின் மேற்கு புறத்தில் உள்ள வாசலின் அருகே ஏற்கனவே சிமெண்ட் தரையாக இருந்த போது, இரண்டு கல்லறைகள் இருந்தன என்பது  ஆலயத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு தெரியும். அந்த கல்லறைகளின் மேல் தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த கல்லறைகள் Rev.. லெக்லர் அவர்களின் 24 வயது மகளும், Rev. மௌரிஸ் பிலிப்ஸ் என்பவரின் மனைவியுமான, திருமதி. மேரி ஜேன்(மறைவு நாள்:: 28-12-1867) மற்றும் அவரது ஐந்து நாட்கள் மட்டுமே நிரம்பிய டோரா எனும் குழந்தையும் (மறைவு நாள் : 29-12-1867) ஆகும். இவர்கள் வி(பு) தைக்கப்பட்ட இடத்தில் தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. Rev. லெக்லர் அவர்கள் காலரா நோயால் 1861ல் மறைந்த பிறகு (இவரது கல்லறை சேலம் சிஎஸ்ஐ லெக்லர் நினைவு ஆலயத்தின் அருகில் உள்ளது) இவரது மருமகன் தனது மனைவி உடன் திருப்பத்தூர் பகுதிக்கு வந்து ஊழியம் செய்து கொண்டிருந்த நிலையில், பிரசவத்தின் போது இவரது மனைவியாகிய, அதாவது Rev. லெக்லர் அவர்களின் மகள் மற்றும் குழந்தை இறந்து போனது நமக்கு வரலாற்று பதிவாக உள்ளது.

திருப்பத்தூர் சி. எஸ். ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தின் கிழக்கு புற சுவற்றில் Altar அருகில் உள்ள வெள்ளை நிற பளிங்கு கல்வெட்டு இதற்கு இன்றும் சாட்சியாக உள்ளது. இதே போன்ற அதே கல்வெட்டு சேலம் சிஎஸ்ஐ லெக்லர் நினைவாலயத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. தன் மனைவி மற்றும் குழந்தை
மரணத்திற்குப் பிறகு Rev.. மவுரிஸ் பிலிப்ஸ் எங்கு சென்றார் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் 1861க்குப் பிறகு இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என அனுமானிக்க இயலுகிறது.

திருப்பத்தூர் லண்டன் மிஷின் ஆலயம் North Tamil Church council (NCCT) -ல் ஒரு அங்கமாக இருந்துள்ளது. அதன் பிறகு தென்னிந்திய திருச்சபை உருவாக்கத்தின் போது NCCT – அங்கமாக இருந்த இந்த ஆலயம் (CSI) தென்னிந்திய திருச்சபையுடன் 1947 செப்டம்பர் 27 இல் இணைக்கப்பட்டுள்ளது.அது முதற்கொண்டு சிஎஸ்ஐ கோவை பேராயத்துடன் இணைந்து இந்த ஆலயம் செயற்பட்டு வந்தது. சென்னை பேராயத்திலிருந்து (அமெரிக்க ஆற்காடு மிஷின்) வேலூர் பேராயம் 1976 ஜனவரி 26 அன்று பிரிக்கப்பட்ட பிறகு, கோவை பேராயத்தின் (லண்டன் மிஷனரி சொசைட்டி LMS) அங்கமாக இருந்த இந்த ஆலயம் வேலூரிலிருந்து சுமார் 90 கிமீ தூரத்தில் அமைந்திருந்ததாலும், அன்றைய வடாற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூர் இருந்த காரணத்தினாலும், இதனை வேலூர் பேராயத்தின் ஒரு அங்கமாக மாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டு அதனுடைய இறுதி கட்டமாக, கடந்த 1979 -ல் இந்த திருச்சபை CSI வேலூர் பேராயத்தின்
ஒரு அங்கமாக மாறியது.

21 8 1938 இல் கூடிய ஒரு கூட்டத்தில் சேலம் லண்டன் மிஷின் பள்ளியின் (தற்போதைய சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி) ஆங்கில ஆசிரியரும் லெக்லர் நினைவு ஆலயத்தின் குருசேகர குழு தலைவருமான ஆங்கிலேய மிஷினரி Rev. எச்mஏ.பாப்ளி அவர்கள் சேர்மன் என்ற முறையில் தலைமை வகித்து பழைய SOUTH INDIA UNION CHURCH, (தற்போதைய திருப்பத்தூர் சிஎஸ்ஐ ஆலயத்தின்) கீழ் ஜோலார்பேட்டை குரு சேகரத்தில் உள்ள ஆலயமும் (தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம் அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்) எலத்தகிரியில் இயங்கி வந்த ஆலயமும், திருப்பத்தூர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு, சேலம் லெக்லர் நினைவாலயம் போதகரின் Chairmanship கீழ் இயங்கி வந்துள்ளன.

வாணியம்பாடி கிளை திருச்சபையுங்கூட திருப்பத்தூர் குருசேகரத்தின் கீழ் இயங்கி வந்த திருச்சபை  ஆகும்.காலப்போக்கில் எலத்தகிரி தனி குருசேகரமாகவும் ஜோலார்பேட்டை தனி குருசேகரமாகவும் பிரிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. வாணியம்பாடி கிளை திருச்சபை நெடு நாட்களாக 19 60 முதல் 1980கள் வரை மறைதிரு. கிறிஸ்டோபர் ஆயர் அவர்களின் வீட்டின் மேல் மாடியில் இயங்கி வந்தது. தற்போது இது தனி குருசேகரமாக்கப்பட்டு வேலூர் பேராயத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆக இந்த திருச்சபைகளுக்கு எல்லாம் தாய் திருச்சபையாக திருப்பத்தூர் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் விளங்கி
வருகிறது.

திருப்பத்தூர் பகுதியில் NMS ( நேஷனல் மிஷினரி சொசைட்டி) மூலமாக சென்னை பேராயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட Rev. ஞானாதிக்கம் ஆயர் அவர்கள் கட்டேரி மற்றும் ஜெயபுரம் ஆகிய இடங்களில் ஊழியம் செய்து வந்தார். அவரின் பெரும் முயற்சியின் காரணமாக ஜெயபுரம் திருச்சபையும் மற்றும் கட்டேரியில் இருந்து வந்த திருமுழுக்கு எடுத்த விசுவாசிகளும் திருப்பத்தூர் திருச்சபையில் சேர்த்து கொள்ளப்பட்டார்கள்…

திருப்பத்தூர் நகரம் கச்சேரி தெருவில் தற்போது இயங்கி வரும் நகராட்சி துவக்கப்பள்ளி லண்டன் மிஷினரிகளின் நேரிடை ஆளுகையில் இருந்து அதன் பிறகு South India union Church (கிறிஸ்துநாதர் ஆலயம் திருப்பத்தூர்) நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்துள்ளது அதேபோன்று (பஞ்சமர்) ஆதிதிராவிடர்கள் ஆண்கள் பள்ளி ஒன்றும் கூட. ஆலய நிர்வாகத்தின் கீழ் இருந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் தற்போது சந்திரபுரத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளி ஒரு காலத்தில் நமது ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மிஷினரிப் பள்ளி ஆகும். மேலும் தற்போது கட்டேரியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் இருந்த மிஷினரிப்பள்ளி ஆகும். இவை காலப்போக்கில் ஆலய நிர்வாகத்தால் நடத்த இயலாத சூழ்நிலையில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

1988 ல், இந்த திருச்சபையைச் சேர்ந்த மூத்தோர்களின் முயற்சியால் சிறிய அளவில் பெண்களுக்கென பிரத்தியேகமாக துவக்கப்பட்ட. பள்ளி தான் இன்று வேலூர் பேராயத்தின் மிகச் சிறந்த பள்ளியாக உருவெடுத்து முதல் இடத்தில் இருந்து வரும் CSI Girls Matriculation பள்ளி ஆகும். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் ஊத்தங்கரை சேலம் நெடுஞ்சாலையில் சிஎஸ்ஐ CBSE பள்ளி வேலூர் பேராயத்தால் துவக்கப்பட்டு இப்பள்ளியும் நகரத்தில் ஒரு சிறந்த பள்ளியாக இயங்கி வருகிறது.

நமது சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் Chairman களாக பல ஆங்கிலேய குருமார்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் சேலம் லெக்லர் நினைவாலயத்தின் குருமார்களாக இருந்து, இங்கு நமது திருச்சபையின் Chairman களாக இறை பணி ஆற்றியிருக்கிறார்கள்… அவர்களில் குறிப்பிட தகுந்தவர்கள்

  1. Rev.R. ராபர்ட்சன்
  2. Rev.T.B. விட்நே
  3. Rev.H.A. பாப்ளி
  4. Rev.I.D. மோசஸ்
  5. Rev.T. ஹென்றி
  6. Rev.W.J. ஹெட்ச்
  7. Rev. ஜான் D. பெனிங்

அதன் பிறகு இந்திய தமிழ் போதகர்கள் மறைதிரு. ஜி. ஞானமுத்து, மறைதிரு. ஏ.மோசஸ், மறைதிரு. ஜேம்ஸ் ரத்தினம் போன்றவர்கள் சேலத்தில் இருந்து வந்து திருப்பத்தூர் குருசேகரத்தின் தலைவர்களாக திருப்பணி ஆற்றி இருக்கிறார்கள்.

மேலும் திருப்பத்தூரை பூர்வீகமாக கொண்ட மறைதிரு டி. நரசிம்மன் (பிராமணர்), மற்றும் மறைதிரு. DP. காலின்ஸ், மறைதிரு. வி.சி.ஜோசப், மறைதிரு ஆர்சி. சாமுவேல், மறைதிரு. ஐ. டி. விக்டர், மறைதிரு. பிலிப் கே.மல்லி, மறைதிரு.எஸ். கிறிஸ்டோபர் (இந்த ஆயர்தான் திருப்பத்தூர் திருச்சபையை வேலூர் பேராயத்துடன் இணைக்கும் போது ஆயராக இருந்தவர்) மறைதிரு. சாம்ராஜ் ஜெயகரன், மறைதிரு. ஜெரமியா, மறைதிரு. பர்னபாஸ், மறைதிரு. எம்.அருள்தாஸ், மறைதிரு. ஒய். சாமுவேல் சுந்தர்ராஜ், மறைதிரு. ஜான் பாஸ்கர், மறைதிரு. எச் சர்மா நித்தியானந்தம், (தற்போதைய வேலூர் பேராயர் அவர்கள்), மறைதிரு மேஷாக் பிரேம்குமார்,
மறைதிரு அர்னால்டு ஜோசப், மறைதிரு.வி.பால் ராபர்ட் கென்னடி, மறைதிரு. கேப்ரியல், மறைதிரு. ஆண்ட்ரூ அண்ணாமலை, மறைதிரு. பக்த தியாகராஜன்
ஆகியோர் இறை பணி ஆற்றியிருக்கிறார்கள். தற்போது 2022 முதல் மறைதிரு. T. சிம்சன் ஆயர் அவர்கள் இறை பணி ஆற்றி வருகிறார்.

திருப்பத்தூர் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தின் செயலர்களாக பணிபுரிந்தவர்கள் என எடுத்துக் கொண்டால் 1920 களுக்குப் பிறகு திரு.என்.நரசிங்கராவ், திரு. ஜோசப் சுந்தரம் டாக்டர் ES ஜான், திரு வி.ஆபிரகாம் பால் ஆகியோரும், 1965 க்கு பிறகு 1980 வரை, மறைந்த தாசில்தார் திரு ஏ.ஜான்சன் சாலமன் அவர்கள் செயலராகவும் பொருளாகவும் அதேபோன்று நமது சபையின் தற்போதைய மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான திரு ஏ ஜான் எட்வின் அவர்கள் செயலாளராகவும் பொருளாளர் ஆகவும் பல ஆண்டுகாலம் தொடர்ந்து இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு செயலாளர்களாக திரு.மனுவேல், டாக்டர் ஜி.டி.செல்வராஜ், திரு. கேபா செல்வராஜ், திரு எ.ஸ்டீபன் ராஜ் ஜெயக்குமார், திரு.எஸ். எம்.ஜெயபாலன், திரு. இரா.வில்சன் இராசசேகர், திரு.எஸ். சரவணன், டாக்டர் .எம். பிரபாகரன், ஆகியோர் இறைபணி ஆற்றியுள்ளனர். தற்போது திரு. சி.ஸ்டீபன் ராஜ் செயலராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருச்சபையின் அன்றைய பொக்கிஷதாரர்களாக திருவாளர்கள் TB. விட்நே, W. ஜோசப், ராவ் சாஹிப் டாக்டர் ஐ ஜி எஸ் நாடார், திரு. டி. வில்லியம் ஜோசப், பிறகு பொருளாளர்களாக திரு. டி.ஒய்.ஜேம்ஸ், திரு. ஆர்.பிரான்சிஸ் சுந்தரம், திரு.ஜி. பால்ராஜ், திரு. கிறிஸ்டி கிருபாகரன், டாக்டர். எம். பிரபாகரன், திரு.ஏ. மில்டன் சம்பத்குமார், திரு.எஸ்.ஜெயக்குமார், திரு. டி.ஜி.எஸ். ராஜ்குமார், திரு,E. ஜெபஸ்டின், ஆகியோர் இறைபணி ஆற்றியுள்ளனர். திரு. எஸ். காத்தவராயன் தற்போது ஆலயத்தின் பொருளாளராக இருந்து வருகிறார்.

It is necessary to know the history of the London Missionary Society (LMS) before knowing the history of CSI. Christ Church is located in Tirupattur district, near the bus station. The London Missionary Society (LMS) was founded in the City of London in 1795. Several Christians from the City of London founded the Society. Hundreds of missionaries were sent from here to various parts of the world. They were specifically sent to spread the gospel in India. From its inception in 1795 to 1945, the London Missionary Society sent 1800 missionaries all over the world, the majority of whom were in England and Scotland. Engineers deployed from These missionaries were sent to a variety of locations around the world, including India, China, Africa, Australia, and various Pacific Island nations. London missionary The Societys work in India was centered at Nagercoil and extended to South Kerala, including Salem, Namakkal, Dharmapuri, Krishnagiri, and Tirupattur (up to Vaniyambadi).

Rev. John Milton Legler (1804-1861) was sent to India by the London Missionary Society from Germany. For four years, he worked for the London Missionary Society, which had its headquarters in Nagercoil. Then he moved to Salem, where the people did not fully understand Christ. He then continued his social and religious work in Dharmapuri, Krishnagiri, Namakkal and Tirupattur, both of which were part of Salem district. According to records, he worked in these areas for social and religious purposes for about 21 years, where he learned Tamil and translated various English books.

In 1840, he established Indias first technical training institute on Salem Bangla Street to provide vocational education to students. It is widely regarded as a watershed moment in Indian history. In 1841, Rev. Legler and Salem District Assistant Collector Mr.H. A. Brett climbed Mount Yercaud on horseback and built MelRose, a firebrick residence. Rev. Holy Trinity Church is situated on Yercaud Hill. According to various records, Lechler constructed a Church in 1853 (the CSI Lechler Memorial) in the Fort area near Salem Chevwaipet. Rev. Lechler is believed to have visited Tirupattur with his family a few years after 1853 and carried out the ministry. When the cement floor was already in place, senior temple members discovered two graves near the entrance on the western side of the Tirupattur CSI Christnathar Temple. These graves served as the foundation for this temple. Mrs. Mary Jane, Rev. Lechlers 24-year-old daughter and Rev. Maurice Phillips; wife, and her five-day-old child Dora (Date of Death: 29-12-1867) are buried in those graves. This temple is located where they were stitched together. After Lechler died of cholera in 1861 (his grave is near the Salem CSI Lechler Memorial Church), his son-in-law traveled to Tiruppattur with his wife to minister, and during childbirth, Rev. The death of Lechlers daughter and child is documented in a white marble inscription near the Altar on the east side wall of the CSI Christ Church, which stands today. Its worth noting that the Salem CSI Legler Memorial has a similar inscription. Rev. Maurice Phillips whereabouts are unknown following the deaths of his wife and child. However, this temple was most likely built after 1861.

Tirupattur London Mission is a member of the North Tamil Church Council. On September 27, 1947, during the formation of the Church of South India, this church, which was part of the NCCT (CSI), was merged with it. Since that time, this church has collaborated with the CSI Archdiocese of Coimbatore. After the separation of Vellore Archdiocese from Chennai Archdiocese (American Arcot Mission) on January 26, 1976, this temple, which was part of Coimbatore Archdiocese (London Missionary Society LMS), was made a part of Vellore Archdiocese because it was about 90 kilometers from Vellore and Tirupattur was part of Vadagardu district at the time. Efforts were initiated, and the parish was admitted to the CSI Vellore Archdiocese in 1979.

In a meeting held on August 21, 1938, English missionary Rev. English, a teacher at Salem London Mission School (now CSI High School) and the head of the Kurusekara Committee of Legler Memorial Temple. HmA. Babli presided as Chairman, and under the old SOUTH INDIA UNION CHURCH (present Tirupattur CSI Temple), the temple at Jollarpeti Guru Sekaram (present Krishnagiri district then united Salem district) and the temple functioning at Elatagiri, connected with Tirupattur temple, Salem Legler Memorial Pastors Chairmanship have been operating under Vaniyampadi Branch Church, which was also functioning under Tirupattur Kurusekaram. Elatagiri Kurusekaram and Jolarpet Kurusekaram began to operate independently over time. The Vaniyampadi Branch Church was hidden for many years, from the 1960s to the 1980s. Christopher Ayer was operating on the top floor of their home. It is now a separate Kurusekara and is administered by the Archdiocese of Vellore. Thus, Tirupattur CSI Christnathar Temple is the mother church for all of these churches.

Rev. Gnanadikkam was appointed to Tirupattur by the Chennai Archdiocese through the National Missionary Society. Rev. Gnanadikkam  worked in both Kateri and Jayapuram. Due to his tireless efforts, the Jayapuram Church and the baptized believers from Kateri were incorporated into the Tirupattur Church.

Tirupattur Town Municipal Primary School, which is currently operating on Kacheri Street, was previously under the direct supervision of London Missionaries and is now managed by South India Union Church (Christ Nath Temple Tirupattur). Similarly, Panjamar Adi Dravidian Boys School is also present. It has been under church management. Aside from that, the current high school in Chandra puram is a missionary school that was once controlled by our temple. The Panchayat Union Middle School, which is still operational in Kateri, was also a missionary school managed by this temple. These were turned over to the government after the church administration was unable to run them.

In 1988, senior members of this Church established a small school that was exclusively for girls. The school is now the best in Vellore Diocese and the top CSI Girls Matriculation School. Following that, the Vellore Archdiocese established the CSI CBSE School on the Tiruppathur-Uthangarai Salem Highway, which is also a top-tier school in town. Many English priests have served as chairman at our CSI Christ Church. Rev. R. Robertson, Rev. T.B. Whitney, Rev. H.A. Popli, Rev. I.D. Moses, Rev. T. Henry, Rev. W.J. Hatch, Rev. John D. Bening, and Indian Tamil preachers Rev. G. Gnanamuthu, Rev. A. Moses, and Rev. James Ratnam have all served as pastors at Salem Legler Memorial and Chairman of our church. Also, Tiruppathurs Rev. D. Narasimha (Brahman), and the Rev. DP. Collins, Rev. VC Joseph, Rev. R.C. Samuel, Rev. I. D. Victor, Rev. Philip K. Malley, Rev. S. Christopher (this Bishop was the Bishop when Tirupattur parish was merged with Vellore Diocese), Rev. Samraj Jayakaran, Rev. Jeremiah, Rev. Barnabas, Rev. M. Aruldas, Rev. Y. Samuel Sundarraj, Rev. John Bhaskar, Rev. H Sharma Nityanandam,
(current Archbishop of Vellor Now through 2022. Rev. Simson is performing the ministry. After the 1920s, Mr. N. Narasingarao worked as a secretary at Tirupattur CSI Christ Church.
Mr. Joseph Sundaram, Dr. ES John, Mr. V Abraham Paul, and the late Tahsildar From 1965 to 1980, Mr. A. Johnson Salomon served as Secretary and Treasurer, as did Mr. A. John Edwin, one of our Councils current senior members, for many years. Following that, Mr. Manuel, Dr. G. D. Selvaraj, Mr. Kepa Selvaraj, Mr. A. Stephen Raj Jayakumar, Mr. S. M. Jayapalan, Mr. R. Wilson Rajasekhar, Mr. S. Saravanan, and Dr. M. Prabhakaran accomplished the work of God. Currently, Mr. C. Stephen Raj serves as Secretary. Rev. TB. Whitney as Treasurers of the Church for the Day, Mr. W. Joseph, Mr. Rao Sahib, Dr. I.G.S Nadar, Mr. D. William Joseph, then treasurers Mr. TY James, Mr. R. Francis Sundaram, Mr. G. Balraj, Mr. Christy Krupakaran, Dr. M. Prabhakaran, Mr. A. Milton Sampath Kumar, Mr. S. Jayakumar, Mr. D.G.S. Rajkumar, Mr. E. Jebastein, have performed the divine work. Mr. S. Kathavarayan currently serves as the Churchs
treasurer.